சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன் இனி எக்காலத்திலும் மகளிரின் வாக்குகள் நமக்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை யார் வெற்றி பெறுவாரோ அவரை வேட்பாளராக இருப்பார். இவர் தான் இந்த தொகுதிக்கு வேட்பாளர் என்று எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்.
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளிடம் பேசிய திமுக அமைச்சர் கே.என்.நேரு எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார். சேலத்தில் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. சேலம் மாநாடு வெற்றிகரமான மாநாடாக அமையும் என தெரிவித்தார். சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…