சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம்…!எம்.ஜி.ஆர். நினைவுநாளில் அதிமுகவினர் உறுதிமொழி …!
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 31-வது ஆண்டு நினைவு நாள் ஆகும்.இந்நிலையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 31ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
பின் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற உழைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.