நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைப்போம்!!அதிமுக அறிக்கை

Published by
Dinasuvadu desk
  • அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
  • கூட்ட்டறிக்கையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் நாம் தேர்தலில் வெற்றி பெற அயராது உழைப்போம் என வீர சபதம் எடுப்போம் என தெரிவித்திருந்தனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளில் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தொண்டர்களுக்கு பின்வரும் வேண்டுகோள்கள் இருந்தது .
அதில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது உழைப்போம் என ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழாவில்
வீர சபதம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.மேலும் அதில் கூறியிருந்ததாவது , பல்வேறு சோதனைகளுக்கு இடையே அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் 1998 ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைத்தது போல தேச நலன் காக்கும் கூட்டணியை உருவாக்கி உள்ளது.நம்முடைய அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி மதச்சார்பின்மை சமூக நீதி தமிழின எழுச்சி ஆகியவற்றோடு அதிமுக தனது அரசியல் பயணத்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…

1 hour ago

தொடரை வென்ற இந்திய மகளிர் அணி! அதிரடி சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…

2 hours ago

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…

2 hours ago

‘வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்தனர்’.. திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…

3 hours ago

மத்திய அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…

3 hours ago

2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…

4 hours ago