'ஒன்றிணைவோம் வென்றிடுவோம்' – செல்பி எடுத்து பதிவிடுங்கள்! விஜயகாந்த் கோரிக்கை!
அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் என கூறப்படுகிறது.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.’ எனவும்,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக (ப்ரொஃபைல் போட்டோ) அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு முக கவத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும். மேலும், இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே மாதம் 3-ந் தேதி வரை வைத்திருக்க வேண்டும்’ என விஜயகாந்த் தனது அறிக்கை மூலம் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.