கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில், நேற்றுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் காரணத்தினால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்துள்ளது, என்றும் தமிழகத்தில் இதுவரை ஆறரை லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும், கொரோனா ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீத பேருக்கு அறிகுறிகளே இல்லை.
மேலும், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். வெளியே செல்லும்போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை என கூறினார்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…