3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்- ஏ.சி.சண்முகம் நம்பிக்கை
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் இன்று வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேலூர் வள்ளலாரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.