தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம் – மு.க.ஸ்டாலின்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிப்-3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் 54-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அமைதிப்பேரணி வகுத்து சென்றனர். இந்த பேரணி, அண்ணா சாலையில் இருந்து தொடங்கி அண்ணா சதுக்கத்தில் முடிவடைந்தது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்! தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்! தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!
தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்! (1/2) pic.twitter.com/LBOSlLVRRc
— M.K.Stalin (@mkstalin) February 3, 2023