திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வீரசபதம் ஏற்போம் – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி
மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்த நாளில் வீர சபதம் ஏற்போம் என ஈபிஎஸ் பேச்சு.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சேலம் சிறுவாச்சூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர் தை பிறந்ததால் அதிமுகவுக்கு வழி பிறந்து விட்டது.
திமுக கிராம மேம்பாட்டு வளர்ச்சிக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்த நாளில் வீர சபதம் ஏற்போம்.
விவசாய பணி என்பது சாதாரண பணி கிடையாது கடுமையான பணி ரத்தத்தை வேர்வையாக மண்ணில் சிந்தி உழைப்பவர்கள் விவசாயிகள் அவர்களுக்காக திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்து சிறுவாச்சூர் ஏரி திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் வற்புறுத்தலால் தான் பொங்கல் தொகுப்பில் விடியா திமுக அரசு கரும்பு வழங்கியது. விவசாயிகளை புறக்கணிக்கும் நடவடிக்கையில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.