தந்தை பெரியார் வழியில் சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் – ஓபிஎஸ்
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், காரிருள் சூழ்ந்திருந்த சமுதாயவானில் பேரொளியாய் வந்துதித்த அறிவுச்சுடர். சாதிமத பேதங்களை எதிர்த்து பெண் அடிமை விலங்கொடித்து அறியாமை இருள் நீக்கிய பகுத்தறிவுப்பகலவன். தமிழர்களைப் பெருமைப்பட வைத்த தந்தை பெரியார் வழியில்
சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
காரிருள் சூழ்ந்திருந்த சமுதாயவானில்
பேரொளியாய் வந்துதித்த அறிவுச்சுடர்சாதிமத பேதங்களை எதிர்த்து பெண் அடிமை விலங்கொடித்து
அறியாமை இருள் நீக்கிய
பகுத்தறிவுப்பகலவன்தமிழர்களைப்
பெருமைப்பட வைத்த
தந்தை பெரியார் வழியில்
சமநீதி சமத்துவம் தழைக்க பாடுபடுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம். pic.twitter.com/2CUXLkYTzf— O Panneerselvam (@OfficeOfOPS) September 16, 2020