ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும், கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே, தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டால் அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலோடு மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த சூழலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடைமுறைக்கு மாறான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையானது பிராந்தியக் குரல்களை அழித்து, கூட்டாட்சித் தன்மையை சிதைத்து, ஆட்சியை சீர்குலைக்கும்.
இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்” என மிகவும் கோபத்துடன் பதிவிட்டு எழுக #இந்தியா! (Rise up #INDIA!) என்ற ஹேஷ்டேக்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
The Union Cabinet has approved introducing the draconian ‘One Nation, One Election Bill’ in Parliament. This impractical and anti-democratic move will erase regional voices, erode federalism, and disrupt governance.
Rise up #INDIA!
Let us resist this attack on Indian Democracy…
— M.K.Stalin (@mkstalin) December 12, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025