“விரைவில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம்”- முதல்வர் ஸ்டாலின்!

Default Image

கோவை:ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் லட்சியம் தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சென்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினா.ர் நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

இந்நிலையில்,திமுக ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. இந்நிலையில், 3-வது கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா திடலில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.ரூ.34,723 கோடி முதலீடுகள் மூலம் 74,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில்,இத்திட்டம் மூலம் தூத்துக்குடி,கரூர், ராணிப்பேட்டையில் அல்ட்ரா டெக் நிறுவனம் சிமெண்ட் உற்பத்தி ஆலைகளும்,கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா நிறுவனம், சிமெண்ட் அரைத்தல் ஆலைகளும் தொடங்கப்பட உள்ளன.மேலும், கிருஷ்ணகிரியில் மின் வாகனங்கள் ஆலையை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அமைக்க உள்ளது.

இதற்கிடையில்,விழாவில் பேசிய முதல்வர் கூறியதாவது:

“5 ஆண்டுகளில் சாதிக்க வேண்டியவற்றை 5 மாதங்களில் நாங்கள் சாதித்ததாக சிலர் புகழ்ந்து பேசினார்கள்.மேலும்,இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக என்னை அறிவித்துள்ளனர்.ஆனால்,நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழகம் என்பதே என் இலக்கு.சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல அரசின் செயல்பாட்டில் மக்கள்தான் முக்கியமானவர்கள்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,”கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது பெருமைக்குரியது. ஏனெனில்,வேளாண்மை, கோழிப்பண்ணை,நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ள பெருமை கொண்ட மாவட்டம் கோவை.ஒப்பந்தம் கையெழுத்து போடும் நிகழ்ச்சியாக மட்டுமே இந்த மாநாடு நடைபெறுகிறது.

மேலும்,வான்வெளி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் கோவை கவனம் செலுத்த வேண்டும்.கோவை மாவட்டம் சூலூரில் தொழிற்பேட்டை பூங்கா அமைக்கப்படும்.அதே சமயத்தில்,மின்னணுவியல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும் லட்சியம் தொலைவில் இல்லை.மாறாக,விரைவில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம்.அதன்படி,தமிழகத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் டைடல் பார்க் அமைக்கப்படும்.”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்