திமுக சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அப்போது, அரங்கில் திமுக தேர்தல் பிரசாரம் குறித்த காணொலி காட்சி வெளியிட்டபட்டது.
அந்த அனிமேஷன் வீடியோவில், நீட்தேர்வு, எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட் ஆலை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகள் போராட்டம் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார் என சொல்வதை போன்று இருந்தது. இறுதியில் ஸ்டாலின் பேசுவது போன்றது வீடியோ இடம்பெற்றது. அதில் அதிமுக அரசாங்கத்தால் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரம் முதல் கிராமம் வரை முழுமையாக சிதைந்துவிட்டது. ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் எதிராக செயல்படும் இந்த அரசு அப்புறப்படுத்த 1500-க்கும் மேற்பட்ட திமுக முன்னணியினர் 16,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு செல்லவுள்ளனர்.
எனவே ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக செயல்படும் இந்த அதிமுகவை அப்புறப்படுத்த அதிமுகவை நிராகரிப்போம் என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. www.werejectadmk.com என்ற வலைதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் தீர்மானத்தை நிறைவேற்றி எங்கள் முன்னெடுப்பில் பங்கு கொள்ளுங்கள். புதிய விடியலை நோக்கி நாம் ஒன்றாக பயணிக்கலாம் என ஸ்டாலின் கூறினார்.
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…