அதிமுகவை நிராகரிப்போம்.. மு.க.ஸ்டாலின் அழைப்பு..!

Default Image

திமுக சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அப்போது, அரங்கில் திமுக தேர்தல் பிரசாரம் குறித்த காணொலி காட்சி வெளியிட்டபட்டது.

அந்த அனிமேஷன் வீடியோவில், நீட்தேர்வு, எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட் ஆலை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகள் போராட்டம் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார் என சொல்வதை போன்று இருந்தது. இறுதியில் ஸ்டாலின் பேசுவது போன்றது வீடியோ இடம்பெற்றது. அதில் அதிமுக அரசாங்கத்தால் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரம் முதல் கிராமம் வரை முழுமையாக சிதைந்துவிட்டது. ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் எதிராக செயல்படும் இந்த அரசு அப்புறப்படுத்த 1500-க்கும் மேற்பட்ட திமுக முன்னணியினர் 16,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும்  வார்டுகளுக்கு செல்லவுள்ளனர்.

எனவே ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராக செயல்படும் இந்த அதிமுகவை அப்புறப்படுத்த அதிமுகவை நிராகரிப்போம் என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. www.werejectadmk.com என்ற வலைதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் தீர்மானத்தை நிறைவேற்றி எங்கள் முன்னெடுப்பில் பங்கு கொள்ளுங்கள். புதிய விடியலை நோக்கி நாம் ஒன்றாக பயணிக்கலாம் என ஸ்டாலின் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்