நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் அனைத்தையும் எழுப்புவோம் …!அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் அனைத்தையும் எழுப்புவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நாடாளுமன்றத்தில் தமிழக நதிநீர் விவகாரம் உட்பட முக்கிய பிரச்சினைகள் அனைத்தையும் எழுப்புவோம்.தமிழகத்திற்கு வர வேண்டிய புயல் நிவாரண நிதி குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் அதிமுக எம்.பி-க்கள் செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.