அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்டார் என பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பேட்டி.
மதுரை விமான நிலையத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர். இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது அமைச்சர் காரை வழிமறித்து பாஜகவினர் அராஜகம் ஈடுபட்டு காலனி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் 6 பேர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. பாஜக மாவட்ட துணைத்தலைவர் குமார் (48), பிரசார பிரிவு செயலாளர் பாலா (49), கோபிநாத் (42), ஜெய கிருஷ்ணா (39), கோபிநாத் (44), முகமது யாகூப் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது, அமைச்சர் கார் மீது தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராணுவ வீரர் லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்டார்.
முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது. அவர் எங்கு சென்றாலும் எதிர்ப்பை பதிவு செய்வோம். அறவழியில் போராடுவோம். திமுக கட்சியை வைத்து வெற்றி பெற்றவர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை. பாஜகவுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதால் இப்படி நடந்து கொண்டுள்ளார். அதிமுகவை பார்த்து வெளியே போக சொல்லாதவர், பாஜகவை காழ்ப்புணர்ச்சியோடு வெளியே போக சொல்லி உள்ளார்.
தரம் தாழ்ந்து அமைச்சர் இன்று நடந்து கொண்டார். நீங்கள் சட்டரீதியாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்களும் சட்ட ரீதியாக அணுகுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…