தமிழுக்கு பதிலாக இந்தியை கொண்டுவரும் எந்த முயற்சியையும் நாங்கள் எதிர்ப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தி திணிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்.
தமிழுக்கு பதிலாக இந்தியை கொண்டுவரும் எந்த முயற்சியையும் நாங்கள் எதிர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இந்தியை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் நிலையில், மத்திய அரசு இந்தியை திணிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மத்திய அரசு எல்லா வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற நன்மைகளைத் தொடர்ந்து அளித்து வருகின்றன. மக்கள் நலனுக்காக அல்லாமல், ஹிந்தியை திணிப்பதில் தங்களுடைய மதிப்புமிக்க வளங்களை செலவழிப்பதில் அவர்கள் குறியாக உள்ளனர்.
மத்திய அரசில் இந்திக்கு அளிக்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம். நாட்டின் பன்முக தன்மையை நம்புகிறோம், நமது மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தியை திணிப்பதற்காக தங்களது மதிப்புமிக்க வளங்களை செலவழிக்க மத்திய அரசு குறிப்பாக உள்ளது. எனவே, இந்தி திணிப்பை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுகவும், அரசும் மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தித் திணிப்பைத் தடுக்க தமிழகமும், திமுகவும் நமது வரலாற்றில் எப்பொழுதும் பாடுபட்டது போல, நமது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்யும். இரயில்வே, தபால் துறை, வங்கி மற்றும் பாராளுமன்றம் என நம்மையும் நம் மக்களையும் நாளுக்கு நாள் பாதிக்கும் மத்திய அரசில் எல்லா இடங்களிலும் ஹிந்திக்கு அளிக்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம்.
நாங்கள் எங்கள் வரிகளை செலுத்துகிறோம், முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறோம் மற்றும் நமது வளமான பாரம்பரியம் மற்றும் இந்த தேசத்தின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நமது மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். நம் நாட்டில் தமிழுக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார்.
While each and every citizen of India is contributing to its development, the Union Government and its institutions continue to give an undue and unfair advantage to Hindi, over other Indian languages in every possible way. Also, they are intent on spending their valuable… pic.twitter.com/2QSCISLqkX
— M.K.Stalin (@mkstalin) June 12, 2023