தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,சட்டப் பேரவைத் தேரதலில் தொகுதிகளுக்காக திமுகவிடம் பேரம் பேசமாட்டோம் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது .தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசமாட்டோம். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் . எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம். வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுகவுக்கு காங்கிரஸால் வலுவூட்ட முடியும். எங்கள் தோழமை கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம் தேவையற்ற பேரங்கள் இருக்காது.கடந்த தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் பாடுபடும். பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…