அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜகவின் விருப்பம் என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜகவின் விருப்பம். வெற்றி வாய்ப்பை பெற இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது அவசியம். பிரிந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது.
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம். ஓபிஎஸ் இபிஎஸ் இரு தரப்புக்கும் சண்டையை மூட்டி குளிர்காயமாட்டோம். வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்.
அவர் சில கோரிக்கைகளை முன்வைத்தார். பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார், இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும்.
பழனிசாமி தரப்பு வேட்பாளர் அந்த தொகுதிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். இருமுறை எம்எல்ஏ-வாக தேர்வானவர். தேர்தல் அறிவித்தவுடன் பாஜக போட்டியிடாது என இரண்டு தலைவர்களிடம் தெரிவித்து விட்டோம். இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை. சுயேச்சை வேட்பாளருக்கு பாஜக ஒருபோதும் ஆதரவு அளிக்காது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…