சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னர் திமுக மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம்.அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை.மேலும் சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது