தலையே போனாலும் தலைகுனிய மாட்டோம்…! விஜயகாந்தின் மகன் அதிரடி…!
கழகத்தை தலையே போனாலும், தலைகுனிய விடமாட்டோம் என்ற கொள்கையில் தான் கேப்டன் உள்ளார், அதே லட்சியத்தில் தான் நானும் என் அம்மாவும் உள்ளோம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தேமுதிகவின் துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என பதிவிட்டுள்ளது அரசியல் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தேமுதிக எங்கையுமே உயர்ந்த கழகம். இந்த கழகத்தை தலையே போனாலும், தலைகுனிய விடமாட்டோம் என்ற கொள்கையில் தான் கேப்டன் உள்ளார், அதே லட்சியத்தில் தான் நானும் என் அம்மாவும் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.