பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்-தமிமுன் அன்சாரி
- அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
- நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.அதேபோல் பாமகவும் கூட்டணி என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியும் சென்றனர்.அங்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளித்தது.
இதன் பின்னர் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலுடன், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
இந்நிலையில் இது தொடர்பாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்.பிப்ரவரி 28-ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்கப்படும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.