மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட திட்டமிடுவதை தமிழக அரசு எதிர்க்கும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை.
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவிப்பிரமாணம் எடுத்த நாட்களிலேயே அண்டை மாநிலத்தை, கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் உரசி பார்ப்பது ஆச்சிரியமாக உள்ளது.
மேகதாது பற்றிய முழு விவரத்தை டிகே சிவகுமாருக்கு அதிகாரிகள் கூறியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களும் தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியான மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது வரவேற்கத்தக்கது அல்ல.
விரைவில் தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது விரிவாக பேசலாம் என கருதுகிறேன். டி.கே. சிவகுமாரை, நான் நேரில் சந்திக்கும் வரை, பொறுமை காப்பார் என நினைக்கிறன். காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.