மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். தமிழக பாஜக என்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பக்கம் நிற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தஞ்சை ஜூபிடர் தியேட்டர் – பனகல் பில்டிங் அருகில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மூத்த தலைவர் கணேசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், தமிழக நீராதாரத்தை பாதிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே கட்டப்படவுள்ள மேகதாது அணை காட்டும் முயற்சியை கர்நாடக அரசு கை விட வேண்டும் எனவும், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நிலத்தடி நீரை பாதிக்கும் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் உரையாற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம். தமிழக பாஜக என்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பக்கம் நிற்கும் என்றும், காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…