“இனிமே கடலுக்கு போகமாட்டோம்”…சிக்கிய மீனவர்கள்…மீட்ட ஹெலிகாப்டர்!

கடலூர் அருகே இறங்குதளத்தில் சிக்கிய மீனவர்கள் 6 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் உறவினர்கள் மகிழ்ச்சி.

FisherManRescue

கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என உத்தரவிட்டிருந்தது. அந்த தடை உத்தரவையும் மீறி கடலூர் தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளை எடுக்கச் 2 படகில் சென்ற போது 2 படகுகள் கவிழ்ந்து  சித்திரைப்பேட்டை அருகே  விபத்து ஏற்பட்ட நிலையில், மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

பிறகு கடலுக்கு அருகிலிருந்த ஜெட்டா என்கிற தனியார் துறைமுகத்தில் தஞ்சம் அடைந்தனர். தற்போது அங்கு இருக்கும் அவர்கள் தனியார் செய்தி நிறுவனம் வாயிலாக கடலில் இருந்து மீன் வளத்துறைக்கு தங்களை காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். “இப்போது கடல் சாதுவாக இருப்பதால் எங்களுக்குப் படகு அனுப்பி வையுங்கள்…இந்த துறைமுகத்திலிருந்து கடற்கரை ஒரு கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கிறது. ஆனால் என”  கோரிக்கையும் வைத்தனர்.

ஆனால், படகு மூலம் மீனவர்களை மீட்க சென்றால் கடல் சீற்றம் திடீரென அதிகமாகி விட்டது என்றால் கண்டிப்பாக அது சரியாக இருக்காது. அந்த படகும் கவிழ்ந்துவிடும் என்பதால் புயல் கரையை கடைக்கும் வரை அங்கயே பாதுகாப்பாக இருக்கவேண்டும் என மீன்வளத்துறையினர் வலியுறுத்தியிருந்தார்கள்.

ஆனால், சிக்கிய அந்த மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் பலரும் உடனடியாக அவர்களை மீட்டு கொடுங்கள்…அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என கோரிக்கை வைத்துக்கொண்டு வந்தனர். இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்கும் யோசனையில் இறங்கிய மீன்வளத்துறை ஒருஹெலிகாப்டரை அந்த இடத்திற்கு வர வைத்தது.

பின் அந்த ஹெலிகாப்டர் மீனவர்கள் சிக்கியிருந்த அந்த பகுதிக்கு சென்று இரண்டு இரண்டு மீனவர்களாக மீட்டு கரையில் இறக்கிவிட்டு மொத்தமாக 6 மீனவர்களும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட பின் கரைக்கு திரும்பிய பிறகு மீனவர்கள் ” இனிமேல் நிச்சயமாக நாங்கள் தடையை மீறி கடலுக்கு செல்லவே மாட்டோம்” எனவும் உறுதி கூறினார்கள்.  மீட்கப்பட்ட மீனவர்கள் கரைக்கு வந்தபிறகு அவர்களுடைய உறவினர்கள் மீட்க உதவி செய்த அதிகாரிகளுக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்