நீட் தேர்வை ஒழித்துக்கட்ட மக்களை திரட்டுவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியது சிறந்த பணியாகும்.
நீட், மருத்துவ கனவுடன் விழையும் மாணவர்கள், பெற்றோர்கள் மீது வலுக் கட்டாயமாக கடந்த 4 ஆண்டுகளாக திணிக்கப்படுகிறது. ஊழலின் ஊற்றுக் கண்ணாக நடைபெற்றுவரும் ‘நீட்’ தேர்வு என்பது நீட் அரசமைப்பு சட்டம் மாநில அரசுகளுக்கு அளித்துள்ள உரிமைகளை பறிக்கும் ஆபத்தான திட்டமாகும்.
மக்கள் விரோத நீட்டை ஒழித்துக்கட்ட மக்களைத் திரட்டுவோம் என்றும் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 165 பக்கம் கொண்ட அறிக்கையை, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதனை குறித்து விவரங்களையும் அனுப்பி, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்க முயற்சி எடுத்துள்ளது பெரிதும் காலத்தால் செய்யப்பட்ட சரியான செயலாகும் என கூறியுள்ளார்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கே திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, தமிழ்நாடு வழக்கம்போல, ‘நீட்’ தேர்வு சமூகநீதிக்கு எப்படி கேடாய் இருக்கின்றது என்பதை இடையறாது எடுத்து, எரிமலையாக விளக்கிடும் சட்டப் போராட்டத்தையும் தொடரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…