சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவரின் அனுமதி படம் பிடிப்பது குற்றம், வீடியோ எடுத்தவரை கைது செய்திருக்க வேண்டும்.
உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என கூறினார். கே.டி.ராகவனை ஆதரித்து பேசியதற்கு சீமான் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கே.டி. ராகவனுக்கு சீமான் ஏன் ஆதரிக்கிறார் என செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அண்ணாமலை சீமான் பேச்சை சீரியஸாக்க வேண்டாம்.
சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…