“பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கைகொடுப்போம்” – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

Default Image

மகாத்மா காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இவர், இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இவரது, பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கதர் ஆடையை உடுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

அதில், கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே இலட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி வகுக்கிறது என்ற அண்ணல் காந்தியடிகள் வரிகளை மனதில் நிறுத்தி, அன்னாரின் பிறந்தநாளான இந்நன்னாளில் மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்தி, அதனை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற துணைபுரிய வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள நூற்போர் மற்றும் நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகள், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும். கைவினைப் பொருட்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 51 கதரங்கடிகளின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கதர் ஆடைகளின், விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கி வருகிறது.

கதர், எளிமை மற்றும் தேசப்பற்றினை வெளிப்படுத்துவதோடு, இந்திய கலக்சாரத்தை பிரதிபலிக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க கதர் ஆடை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்தி, ஏழை எளிய கதர் நூற்போர் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டு கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்