திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றுவோம் – அடிமைத்தனத்தை எதிர்ப்போம்! மு.க.ஸ்டாலின்!

திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றுவோம் எனவும், அடிமைத்தனத்தை எதிர்த்து போராடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும் கொடிகாத்தகுமரன் என அழைக்கப்படுபவருமாகிய திருப்பூர் குமரனின் 117 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் பல்வேறு தலைவர்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் திருப்பூர் குமரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்உயிர் பிரிய கூடிய நிலையிலும் மூவர்ண கொடியை கீழே விடாமல் கையில் ஏந்தி வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து முழக்கமிட்ட கொடிகாத்த சுதந்திரப் போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் தியாகத்தை அவரது பிறந்தநாளில் நெஞ்சில் ஏந்துவோம். எல்லாவகை அடிமைத்தனத்தையும் எதிர்த்து உறுதியுடன் செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
உயிர் பிரியும் நிலையிலும் மூவண்ணக் கொடியை கீழே விடாது கையில் ஏந்தி வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து முழக்கமிட்ட, கொடி காத்த சுதந்திரப் போராட்ட வீரர் #திருப்பூர்குமரன் தியாகத்தை அவரது பிறந்தநாளில் நெஞ்சில் ஏந்துவோம்; எல்லாவகை அடிமைத்தனத்தையும் எதிர்த்து உறுதியுடன் செயல்படுவோம்! pic.twitter.com/Za912msf16
— M.K.Stalin (@mkstalin) October 4, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025