விரைவில் உங்களை மீட்டு விடுவோம்! – உக்ரைனில் உள்ள மாணவர்களிடம் முதலமைச்சர் உரையாடல்!
உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா என உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதுவரை சுமார் 1,500 பேர் உதவிக்காக பதிவு செய்துள்ள நிலையில் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது, உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் உரையாடினார். அதில், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் தைரியமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களிடம் சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். விரைவில் உங்களை மீது இந்தியா அழைத்து வந்து விடுவோம், தைரியமாக இருங்கள்.. அதற்கான பணியில் தான் ஈடுபட்டு வருகிறோம் என்று உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடியோ காலில் பேசி, நம்பிக்கையூட்டினார்.