ஹத்ராஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ். அழகிரி!
ஹத்ராஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயதான பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பல்வேறு இடங்களிலும் பெரும் கண்டனத்தை பெற்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் அப்பெண்ணின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற உத்திரப்பிரதேசம் சென்றனர். அவர்களை உள்ளே செல்ல விடமால் காவலர்கள் தடுத்ததால், ராகுல்காந்தி கீழே தள்ளப்பட்டார் என செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகிய கே எஸ் அழகிரி அவர்கள் ஏற்கனவே 11 தலித்துகள் 1977 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆறுதல் கூற பல தடைகளை கடந்து யானை மீது அமர்ந்து இந்திரா காந்தி அவர்கள் சென்றதும் தற்பொழுது நினைவுக்கு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய பாரம்பரியத்தில் வந்தவர்கள் ராகுலும், பிரியாவும் என்பதை நிரூபித்து உள்ளார்கள் எனவும் அந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், போராட்டம் வெற்றிபெறும் வரைக்கும் இணைந்து போராடுவோம் என காங்கிரஸ் கட்சியினருக்கு கே எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.