உள்ளாட்சித்தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்- திருமாவளவன்..!
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட காட்பாடி மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தினரை எம்.பி தொல்.திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறி மாணவி திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளார்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் உள்ள மைனஸ் மார்க் எனப்படுவது மாணவர்களை அச்சுறுத்துகிறது.
நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த அளவு இடங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நல்லிணக்கமான பேச்சுவார்த்தை ஆறுதல் அளிக்கிறது. தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என கூறினார்.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு தென்னைமர சின்னத்திலும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடங்களுக்கு கைக்கடிகாரம் சின்னத்திலும் போட்டியிடுவதாக கூறினார்.