பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனபள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனின் தாய் தெரிவித்தார்.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர், பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், இறந்த 2-ம் வகுப்பு மாணவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனின் தாய் ஜெனிபர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தனது ஒரே மகனை பறிகொடுத்த இருப்பதாகவும், பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். காலை 8: 30து மணிக்கு பள்ளிக்கு குழந்தையை அனுப்பினேன். 8 :40 பள்ளியிலிருந்து மகனுக்கு விபத்து ஏற்பட்டதாக கூறினார்கள்.
மருத்துவமனைக்கு சென்று குழந்தையைப் பார்க்கையில் வாய், மூக்கு, உடல் முழுக்க ரத்தமாக இருந்தது. என்ன நடந்தது என்று பள்ளி தரப்பில் இதுவரை ஒருவர் கூட சொல்லவில்லை. உணவு கூடையை விட்டு சென்றதாகவும், தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் என் குழந்தையின் வயிற்றில் பள்ளி வாகனம் ஏறி இறங்கிஉள்ளது என தெரிவித்தார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…