நாங்கள் உரிய நேரத்தில் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளரையும், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். திமுக சார்பில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.
அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக அதிமுக இருப்பதால் யார் போட்டியிடுவார்கள் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறது. இன்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நாங்கள் உரிய நேரத்தில் எங்கள் வேட்பாளரை அறிவிப்போம். எங்கள் கூட்டணி தர்மத்தின்படி எல்லோரையும் சந்தித்துள்ளோம். அவர்கள் விரைந்து நல்ல முடிவு எடுப்பார்கள் என நினைக்கிறோம். என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…