இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம். – பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி.
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அந்த கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். நாளை மறுநாள் அந்த வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இதுகுறித்து இன்னும் யோசனையில் இருக்கிறது. அதே போல அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் இன்னும் உறுதியான முடிவை கூறவில்லை. இன்று சென்னையில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை பாஜக முக்கிய நிர்வாகிகள் உடன் நடைபெற்றது.
அது முடிந்ததும் பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நிற்க பாஜகவில் இருந்தே நிறைய நபர்கள் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆனால், அனைத்தும் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தான் இதனை முடிவெடுப்பார்கள் என கூறினார். மேலும், ஓபிஎஸ் – இபிஎஸ் என பலரும் கலந்து ஆலோசித்து உள்ளனர். இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம் என கூறினார் பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவான புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…
சென்னை : தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் இன்று. உதயநிதி பிறந்தநாளை…
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை…
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு…
வாஷிங்டன் : கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் காசாவில் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை…