நல்லெண்ணம் கொண்ட ரஜினியின் எந்தவொரு அரசியல் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படக்கூடிய ரஜினிகாந்த் கடந்த இரு வருடங்களுக்கு முன்பதாக தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். எனவே வருகின்ற தேர்தலில் அவர் கட்சி துவங்கி போட்டியிடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் அவருக்கு உடல் நலம் குறைந்து இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, இணையத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி அதில் அவர் அரசியலுக்கு வரமாட்டார் எனவும் வதந்திகள் கிளம்பியது.
உடல்நலம் சரியில்லை என்பது உண்மை தான் என ஏற்றுக்கொண்ட ரஜினி ஆனால், அந்த அறிக்கை தான் வெளியிடவில்லை என மறுத்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் பாலாஜி ரஜினி கடந்த 40 ஆண்டுகளாக மக்களுடனே இருப்பதால் அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் போனாலும் ரஜினியை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் என கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…