இன்று முதல்வர் பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சசிகலாவின் விடுதலை குறித்து அவரது வழக்கறினரான ராஜா செந்தூர்பாண்டியனுக்கு சிறை நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி கடிதம் கிடைத்திருக்கிறது.அந்த கடிதத்தில், ஜனவரி 27-ஆம் தேதி புதன்கிழமை காலை சசிகலா விடுதலையாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி ,சசிகலா வெளியில் வந்த பிறகு 100 % இணைய வாய்ப்பில்லை என்று கூறினார்.
இந்நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் சசிகலா குறித்து கூறுகையில்,ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவுடன் எல்லோரும் உறவாகத் தான் இருந்தோம்.இன்றைக்கு இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்.அரசு திடமாக இருக்க வேண்டும்.எனவே இன்று முதல்வர் பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம்.நாங்கள் மட்டும் அல்ல .அதிமுகவினர் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…