நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கருத்து.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், அதிமுகவுக்கு கூட்டு தலைமை வேண்டும், கட்சியில் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம். 23 தீர்மானங்களை தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டதால் அவை எதுவும் செல்லாது எனவும் கூறினார். மேலும், அதிமுக பொதுக்குழு பிரச்சனை தொடர்பாக தேர்தல் ஆணையத்தை சந்திக்கவில்லை. பாஜக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார்கள், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்தார்கள். திமுக சின்னத்தை முடக்க ஓபிஎஸ் டெல்லி செல்லவில்லை, ஜனாதிபதி தேர்தலுக்காகவே சென்றுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…