தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையின் செல்லப் பிள்ளை எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை ஆர்.ஏ.புறத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் கோப்பை 2023 க்கான சின்னத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சி.எஸ்.கே.கேப்டன் தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி; லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக விளங்குகிறார். சென்னையின் செல்லப் பிள்ளை எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தோணி சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அதனால் தான் இன்று அவர் விளம்பர தூதராக உள்ளார். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025