அறிக்கையில் வாபஸ் பெற வலியுறுத்துவோம் – சிடி ரவி., இதுதான் எங்கள் நிலைப்பாடு – அமைச்சர் ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

எங்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என சிடி ரவி தெரிவித்த கருத்துக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, குடியுரிமை சட்டம் குறித்து அதிமுக குழப்பத்தில் உள்ளது. ஆகையால், நாங்கள் குடியுரிமை சட்டத்தின் சிறப்பு குறித்து அதிமுகவினருக்கு விளக்கி சொல்லி, அறிக்கையில் இருந்து வாபஸ் பெற வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேசிய மீன்வளத்துத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் அறிக்கையை பொறுத்தளவில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, குடியுரிமை சட்டம் தமிழகத்திற்கு எந்த விதத்திலும் தேவையில்லை என்றதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்பதை தேர்தல் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அந்த ஒருமித்த நிலைப்பாட்டை தான் மீண்டும் அதிமுக அரசு அமையும் போது, நிச்சயமாக குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி அவருடைய கருத்தை சொல்லிவுள்ளார். எங்களின் கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். எங்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என எதிர் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!

“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!

சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…

24 minutes ago

தூத்துக்குடி உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …

57 minutes ago

எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…

1 hour ago

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

2 hours ago

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

2 hours ago

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

3 hours ago