நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம் – கமலஹாசன் ட்வீட்
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி, மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் என கமலஹாசன் ட்வீட்.
இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று. உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 30, 2022