திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
5-வது நாள் அதிகாலையில் குழந்தையை சடலமாக தான் மீட்டெடுத்தார்கள். குழந்தை மீண்டு வருவான் என்ற எதிர்பார்த்தவர்கள் அனைவரும் இன்று, கடவுளிடம் சென்று வா குழந்தாய்! என கூறும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் விஜய் பாஸ்கரும் உடனிருந்து, எப்படியாவது குழந்தையை மீட்டு விட வேண்டும் என போராடினர். ஆனால், யாருடைய முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், குழந்தை சுஜித் மரணம் குறித்து அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘ மனதை தேற்றிக் கொள்கிறேன். ஏனென்றால், இனி நீ கடவுளின் குழந்தை. கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான், ஊனின்றி, உறக்கமின்றி இரவுப்பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி என்னை புலம்பி அழ விடுவாய் என எண்ணவில்லை.’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…