கருவறை இருட்டு போல இருப்பாய் என நினைத்தோம்! கல்லறை இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
5-வது நாள் அதிகாலையில் குழந்தையை சடலமாக தான் மீட்டெடுத்தார்கள். குழந்தை மீண்டு வருவான் என்ற எதிர்பார்த்தவர்கள் அனைவரும் இன்று, கடவுளிடம் சென்று வா குழந்தாய்! என கூறும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் விஜய் பாஸ்கரும் உடனிருந்து, எப்படியாவது குழந்தையை மீட்டு விட வேண்டும் என போராடினர். ஆனால், யாருடைய முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், குழந்தை சுஜித் மரணம் குறித்து அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘ மனதை தேற்றிக் கொள்கிறேன். ஏனென்றால், இனி நீ கடவுளின் குழந்தை. கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான், ஊனின்றி, உறக்கமின்றி இரவுப்பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி என்னை புலம்பி அழ விடுவாய் என எண்ணவில்லை.’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்