நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் – சீமான்!

Default Image

நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் என சீமான் தெரிவித்துள்ளார்.

வருகிற மே மாதத்துடன் தமிழகத்தில் சட்டமன்ற ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளுமே யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது தனித்து போட்டியிடுவதா? என தற்பொழுது பேச்சுவார்த்தைகளை தொடங்க ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழவேண்டும் என நினைக்கிறார்கள்.

எனவே நான் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எப்பொழுதும் போல தனித்து தான் போட்டியிட உள்ளேன். தமிழ் குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேசியவர்கள் அதற்கு எதிரான காட்சிகள் உடன் கூட்டணி வைத்ததால் தான் தமிழின் பெருமையை குறித்து தற்பொழுது பேச முடியாமல் இருக்கிறார்கள் என கூறியுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலும் தொகுதி வேட்பாளர்களை நியமிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எப்பொழுதும் போல நாம் தமிழர் கட்சி பாஜக, அதிமுக, காங்கிரஸ், அதிமுக என எந்த கட்சியுடனும் நிச்சயமாக சேராது, தனித்தே நிற்கும் என சீமான் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்