“விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப,அடியோடு அழிக்க,சபதம் ஏற்கிறோம்” – அதிமுகவினர் உறுதிமொழி!

Default Image

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,புரட்சி தலைவருமான டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் .மேலும்,”விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப,அடியோடு அழிக்க, சபதம் ஏற்கிறோம்” என்று கட்சி ஒருங்கிணப்பாளர்கள் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி.

கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கி,1977-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று,சத்துணவுத் திட்டம்,பெண்களுக்கு திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறந்த திட்டங்களையும் நிறைவேற்றியாவரும்,இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவருமான மறைந்த புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34 ஆண்டு நினைவும தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில்,எம்.ஜி.ஆர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.மேலும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான  தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து,நடைபெற்ற நிகழ்வில் அதிமுகவினர் கீழ்க்கண்ட உறுதிமொழியினை ஏற்றனர்.

  • “மக்களாட்சி தந்த முன்னாள் முதலமைச்சர்; எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்; அரசியல் உலகிலே அழியாத அற்புதம்;
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர்; ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். ஏழைகளுக்கு இரு விழியாக,இருள் அகற்றும் சுடர் ஒளியாக,வாழ்ந்திட்ட எம்.ஜி.ஆர்.,வரலாறு படைத்திட்ட எம்.ஜி.ஆர். அவர்களின்,புகழ் காக்க உறுதி ஏற்கிறோம்!புகழ் காக்க உறுதி ஏற்கிறோம்! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், வகுத்துத் தந்த பாதையிலே வீறு நடை போடுவோம்! வெற்றி நடை போடுவோம் என,உறுதி ஏற்கிறோம்! உறுதி ஏற்கிறோம் !
  • அராஜகத்தின் அடையாளம் திமுக-வை, வீழ்த்துகின்ற தெய்வ சக்தி; மக்கள் வாழ்த்துகின்ற தெய்வ சக்தி; வள்ளல் எம்.ஜி.ஆரின் வழி நடப்போம்; புது வரலாறு நாம் படைப்போம் என, உறுதி ஏற்கிறோம்.. உறுதி ஏற்கிறோம்..
  • அள்ளிக் கொடுத்த நம் தலைவர்; வீரம் சொல்லித் தந்த நம் தலைவர்; திமுக-வை வீழ்த்துவதில், வெற்றி கண்ட நம் தலைவர்; அவர் வழியில் நடைபோட்டு, நாமும் திமுக-வை, வீழ்த்துவோம், வீழ்த்துவோம்… என்று விண்ணதிர முழக்கமிட்டு, உறுதி ஏற்கிறோம், உறுதி ஏற்கிறோம்.
  • சிங்கநிகர் கூட்டத்தை… உருவாக்கிய நம் தலைவர், திமுக-வின் அராஜக ஆட்டத்தை, ஒடுக்குவதற்கு கழகம் கண்டார். திமுக-வின் ஊழலை ஒழிப்பதற்கு, தேர்தல் களம் கண்டார்; வெற்றிகள் பல கண்டார்.அவரின் புரட்சிப் பாதையிலே, நடை போட்டு, நடை போட்டு,திமுக-வின் விடியா அரசை,வீழ்த்துவோம்,வீழ்த்துவோம் என,உறுதி ஏற்கிறோம்,உறுதி ஏற்கிறோம்.
  • திமுக-வை வீழ்த்த;நேர்மை என்ற வாளெடுத்தார்;வாய்மை என்ற வேலெடுத்தார்;அம்மா என்ற வீர மங்கையை,தமிழ் மக்களுக்கு புரட்சித் தலைவர் அர்ப்பணித்தார்.அந்த வீரத் திருமகன் வழி நடப்போம்;அவர் தந்த அம்மாவின் வழி நடப்போம் என,உறுதி ஏற்கிறோம், உறுதி ஏற்கிறோம்.
  • ஏமாற்று வேலையெல்லாம், திமுக ஆட்சியிலே… பொய்யான வாக்குறுதி, திமுக ஆட்சியிலே… தவிக்கிறது, தவிக்கிறது… தமிழகமே தவிக்கிறது… மீட்டெடுப்போம்… மீட்டெடுப்போம்… தமிழ் நாட்டை மீட்டெடுப்போம்… அமைத்திடுவோம்…அமைத்திடுவோம்… மக்களுக்கு நலம் தரும் ஆட்சியை; தமிழர் வாழ்வில், வளம் தரும் ஆட்சியை; மீண்டும் அம்மாவின் ஆட்சியை, அமைத்திடுவோம்…அமைத்திடுவோம் என்று,உறுதி ஏற்கிறோம்… உறுதி ஏற்கிறோம்…
  • விடியா அரசே.. விடியா அரசே… நீட் தேர்வு விலக்கு எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே ? டீசல் விலை குறைப்பு எங்கே ? கேஸ் சிலிண்டர் மானியம் எங்கே ? மகளிர்க்கு மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் எங்கே ? பொங்கல் வருது…! பொங்கல் வருது… பரிசுத் தொகை எங்கே ? எங்கே ? மக்கள் கேள்விக்கு பதில்கள் எங்கே? விடமாட்டோம்… விடமாட்டோம்… பதில் வராமல் விடமாட்டோம்…
  • அரசின் திட்டங்களை, நாங்கள் செய்தோம் என தம்பட்டம். அம்மா அரசின் சாதனைகளை, நாங்கள் செய்தோம் என பித்தலாட்டம். இனி, விடமாட்டோம்… விடமாட்டோம்… மக்களை ஏமாற்ற விடமாட்டோம்… கொடி பிடிக்கும் தொண்டனுக்கும், பதவி தருவது நம் கழகம்; கொடி பிடிக்கும் தொண்டனையும், உயர்த்தி விடுவது நம் கழகம். சோதனை வரும்போதெல்லாம், வெகுண்டு எழுவதும் நம் கழகம்; எதிரிகள், அழிக்க நினைக்கும் போதெல்லாம், வெகுண்டு எழுவதும் நம் கழகம்; அதிலே வெற்றி பெறுவதும் நம் கழகம். நம் உணர்வில் கலந்தது நம் எம்.ஜி.ஆர்.; நம் உதிரத்தில் கலந்தது நம் அம்மா. இந்த இருவரோடு இரட்டை இலை; இனிமேல் தோல்வி நமக்கில்லை என, உறுதி ஏற்கிறோம்… உறுதி ஏற்கிறோம்.
  • வருகுது,வருகுது,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்! நமக்கு,பெருகுது, பெருகுது மக்கள் ஆதரவு; நமக்கு பெருகுது மக்கள் ஆதரவு. எம்.ஜி.ஆர். ஆசிகள் இருக்கிறது;அம்மா ஆசிகள் இருக்கிறது; தொண்டர் பலம் இருக்கிறது; மக்கள் துணையும் இருக்கிறது. உணவை மறப்போம்; உறக்கத்தை மறப்போம். உழைப்போம்… உழைப்போம்… ஒன்றாய் உழைப்போம்… அடைவோம்… அடைவோம்… வெற்றியை அடைவோம் என்று, உறுதி ஏற்கிறோம்… உறுதி ஏற்கிறோம்..
  • விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப; தீயசக்தியை அடியோடு அழிக்க, சபதம் ஏற்கிறோம்… சபதம் ஏற்கிறோம்… புரட்சித் தலைவர் நினைவு நாளில், நம் அம்மா மீது ஆணையாக, உறுதி ஏற்கிறோம்… உறுதி ஏற்கிறோம்”,என்று உறுதிமொழி ஏற்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala