நாங்கள் நம்பும் கடவுள் ராமர் வாழ்ந்த காலத்தில் எழுப்பப்பட்ட பாலம் அது. அதற்கு சேதாரமில்லாமல் செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அப்படி செய்தால் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறேன். – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
இன்று தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமேஸ்வரம் கடல் பகுதியில் சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்த தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாதங்கள் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் போது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரையில் எந்த இடத்தில் கட்டுமானம் கட்ட முடியும் என தெரியவில்லை என்று தான் குறிப்பிட்டார். உறுதியாக முடியாது என்று சொல்லி இருக்காரா என தெரியவில்லை.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், உங்களை விட சந்தோச படுவது தென் தமிழகத்தை சேர்ந்த நாங்கள் சந்தோசப்படுவோம். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டியுள்ளார்.
முதல்வர் தீர்மானம் குறிபிட்ட பகுதி கடல் ஆழமில்லா பகுதி. அங்கு மண் எடுக்க எடுக்க நீரோட்டம் வந்து மண் நிரம்பி கொண்டே இருக்கும். மேலும் நாங்கள் நம்பும் கடவுள் ராமர் வாழ்ந்த காலத்தில் எழுப்பப்பட்ட பாலம் அது. அதற்கு சேதாரமில்லாமல் செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அப்படி செய்தால் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறேன். என தெரிவித்தார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…