திமுகவுக்கு பயத்தை காட்டினோம்.! நாங்கள் தான் உண்மையான வெற்றியாளர் – ஜெயக்குமார் பேட்டி!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம் என ஜெயக்குமார் பேட்டி.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. 15 சுற்றுகள் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ப முதல் இறுதி வரை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். அதிமுக வேதபாலர் டெபாசிட்டை தக்க வைப்பாரா என்ற சூழல் இருந்த நிலையில், தக்க வைத்தார்.

காங்கிரஸ் வெற்றி:

இதனைத்தொடர்ந்து, இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 43,553 வாக்குகளே கிடைத்தன. அதிமுக வேட்பாளரை 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

இபிஎஸ்-க்கு பின்னடைவு:

மறுபக்கம், இபிஎஸ் தலைமையில் அதிமுக ஒரு வெற்றி கூட பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி வரலாற்றின் மோசமான தோல்வி என்று ஓபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர். இபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்றும் இது நீடித்தால் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கதிதான் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாதாளம் வரை பணம்:

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை பொறுத்தவரை கட்சி எழுச்சியாகவே உள்ளது.ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் பயந்தன. இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது.

திமுகவுக்கு பயம்:

cmmkstalinchengalpattu

ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரை ஆளும் திமுக அரசுக்கு மிகப்பெரிய பயம், எந்த தேர்தலிலும் இதுபோன்று அவர்கள் பயந்ததில்லை, இந்த தேர்தலில் பயந்து தான் 350 கோடி செலவு செய்து போலியான வெற்றி பெற்றுள்ளனர். எனவே, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் எங்களைப் பொறுத்தவரை இது ஒரு தோல்விகரமான வெற்றி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.

சட்டரீதியாக சந்திப்போம்:

ops26

மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதை குறித்த கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா எங்களை விட்டுவிட்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடட்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்