அரசு திட்டத்தின் பிளஸ், மைனஸை ஆராய்ந்து அரசுக்கு சொல்ல வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

அனைத்து மாவட்ட வளர்ச்சியை திராவிட நாடு கொள்கையின் முக்கியமான குறிக்கோள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில், இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு, கொள்கைக்கான ஆலோசனை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், அரசின் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் இருப்பதற்கான வழிகளை கண்டறியுங்கள். அறிவிக்கப்படும் திட்டத்தின் பிளஸ், மைனஸை அலசி ஆராய்ந்து அரசுக்கு சொல்ல வேண்டும்.

மகளிர் திட்டத்தை இலவசம்  என குறுகிய அடைப்புக்குள் அடக்காமல் பொருளாதாரப் புரட்சி என எடுக்க வேண்டும். இலவச பேருந்து திட்டத்தால் குடும்பங்களின் வருவாயில் 8 முதல் 12 சதவீதம் சேமிப்பு கிடைக்கிறது என்பது புரட்சி.

இலவச பேருந்து திட்டம் குறித்த நேர்மறையான தாக்கம் பற்றி கட்டுரைகள் வெளிவர வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. அனைத்து மாவட்ட வளர்ச்சியை திராவிட நாடு கொள்கையின் முக்கியமான குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்