உலகத்திலிருந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பிவைப்போம்!
உலகத்திலிருந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், தற்போது இந்த வைரஸ் நோயானது தமிழகத்திலும், 1,400-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோயினால், பல சாதாரண மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மக்களுக்கு மருத்துவம் பார்க்கும், மருத்துவர்கள் கூட இந்த நோயாளிகளுக்காக மருத்துவம் பார்த்து, தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களை, சக மனிதர்களாகிய நாம், அவர்களை தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைப்பது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில், சென்னையை சேர்ந்த 2 மருத்துவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எந்தவொரு நோய்ப்பரவல் ஏற்படாது. மக்கள் அச்சப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் சிலர் இவ்வுலகை விட்டு விடைபெற்று செல்வதென்பது மிகவும் துரதிஷ்டவசமானது. கொரோனா தொற்று நோயால் சில நல்ல மனிதர்கள் நம்மை இழக்க நேரிடுவது கடினமான ஒரு நிகழ்வு, சக மனிதர்களாகிய நாம் அவர்களை தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைப்பது ஒவ்வொருவரின் கடமை. கொரோனாவால் இறக்கும் நபர்களுக்கு தகனம் , அடக்கம், செய்ய உலக சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றுகிறோம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.