தமிழகத்தில் மொழி திணிப்பைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.முதலமைச்சரின் அறிவிப்புக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிவிப்பில், தாய்மொழிக் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றிருக்கின்றனர் புதிய கல்விக் கொள்கையானது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட கொண்டு வரப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமானதல்ல, ஹிந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்பது எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை மாணவர்கள் கல்வி கற்பதில் மகிழ்வான உற்சாகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கூடுதல் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள் தமிழ்நாட்டில் சி.பி எஸ். சி மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன இப்பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.
அப்படியென்றால் கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் இழக்கிறார்கள் ஹிந்தி மற்றொரு இந்திய மொழி கற்க விரும்பும் மாணவர்களின் ஆர்வத்திற்கு பெற்றோர்களின் விருப்பத்திற்கும் நாம் தான் இடையூறாக இருக்கும்.புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தோம், தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.இந்திய மாணவர்களின் இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி உலக அளவில் அவர்கள் போட்டித் திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையை மொழி பற்றி மட்டுமே பேசி தடுத்துவிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார். தமிழகத்தில் மொழி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோமே தவிர, மொழி கற்றுக்கொள்வதை அல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…