இனி இந்தியாவை United States of India என்றே அழைக்க வேண்டும்-மாநிலங்களவையில் வைகோ பேச்சு
மாநிலங்களவைக்கு 23 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.இந்த முறை எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார்.
அந்த வகையில் மாநிலங்களவையில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் பேசிய மதிமுக எம்.பி. வைகோ,
சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்ட திருத்த மசோதா, ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார். தனிநபர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்க வைக்கும் இந்த மசோதாவின் அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் போராளிகளை, பழி வாங்க நேரிடும் என்றும் கூறினார். நாடுகளின் கூட்டமைப்பு தான் இந்தியா என்றும் இதனால் இதனை இந்திய ஐக்கிய நாடுகள் ( United States of India) என்றே அழைக்க வேண்டும் என்றும் கூறினார் மதிமுக எம்.பி. வைகோ.